மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை ‘பங்ளா’ அல்லது ’போங்கோ’ என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மேற்கு வங்காள மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். ஒருங்கிணைந்த வங்காளமாக இருந்த பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழங்கு வங்காளம், மேற்கு வங்காளம் என பிரிக்கப்பட்டது. பின்னர் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிடம் இருந்து விடுபட்டு பங்களாதேஷ் என்ற நாடாக மாறியது.
கிழக்கு வங்காளம் என்று ஒன்று இல்லாத போது மேற்கு வங்காளம் என்ற ஒன்று தேவையா என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில் அதன் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது.