பென்னு குறுங்கோளில் இருந்து ஆய்வுக்கான மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் அறிவியல் உலகின் மிக முக்கிய முயற்சி என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் மாதம் பென்னு குறுங்கோளை ஆய்வு செய்யும் பணிக்காக ஆசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக்கோள் அனுப்பப்படுவது குறித்து செய்தியாளரிடம் விளக்கிய விஞ்ஞானிகள், இந்த முயற்சியின் மூலம் சூரியக் குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள இயலும் என்றும், குறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து உண்டா என்பது குறித்தும் ஆய்வு செய்ய இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பதிவு செய்த நாள் : August 18, 2016 - 05:31 PM
source: new gen media