வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு.....!!


தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருண் பிரசன்னா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 18) பிறப்பித்துள்ளது.
முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை இன்னும் சில நாட்களில் வருகிறது. பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் விநியோகம் செய்வார்கள்.
முஸ்லிம்களின் பண்டிகையின் போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உலகத்தில் எந்த நாட்டிலும் இந்த மாதிரியான கேவலமான சட்டமும் கிடையாது. கேவலமான நீதிபதிபதிகளும் கிடையாது.
முஸ்லிம்கள் மாடு வெட்டக்கூடாது, முஸ்லிம்கள் ஒட்டகம் வெட்டக்கூடாது. ஆனால் RSS இந்துத்துவா கும்பல் மனிதர்களை வெட்டலாம், முஸ்லிம்களை நரவேட்டையாடலாம், முஸ்லிம்களை கொன்று குவிக்கலாம். அதையெல்லாம் நீதிபதிகள் நேரில் பார்த்தாலும் முகத்தை திருப்பி கொண்டு செல்வார்கள்.
முஸ்லிம்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் தான் முடிவு செய்ய வேண்டும்.
நீதிமன்றமோ நீதிபதிகளோ முடிவு செய்யக்கூடாது.
எங்களுடைய அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சாப்பிட சொன்னதை சாப்பிடக்கூடாது என்று சொல்ல நீ யாரடா ?
இதேப்போன்ற ஒரு குப்பை உத்தரவை ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னும் உயர்நீதிமன்றம் கூறியது.
அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் TNTJ தலைமையகத்தில் நடந்த ஜும்ஆ உரையில்...
குர்பானி கொடுப்பதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரக்கூடிய பக்ரீத் பண்டிகையன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் தடையை மீறி ஆடு, மாடு, ஒட்டகம் வெட்டி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஒரேயொரு அறிவிப்பு வெளியிட்டார்.
அலறி அடித்த உயர்நீதிமன்றம் அவசர அவசரமாக முன்னர் கூறிய தீர்ப்பை மாற்றி வெளியிட்டது.
முஸ்லிம்களின் அமைதியும், சகிப்புத்தன்மையும் இஸ்லாமிய சட்டத்தில் நுழையாதவரை மட்டுமே...
source: TNTJ Jeddah