பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தனது காவிச் சிந்தனையை திணிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் சமஸ்கிருதத்தை கட்டாயப்பாடமாக்க வேண்டும், மற்றும் குலக் கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும் போன்ற அம்சங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை வகுத்து அதை மாநிலங்களிடையே புகுத்த கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எல்லா மாநில அரசுகளின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இந்தக் கொள்கை நடைமுறைக்கு வரும் என்ற பா.ஜ.க. அரசின் வாக்குறுதியை வழக்கம்போல் அவர்களே மீற முற்பட்டிருக்கிறார்கள்.
பெரும்பாலான மாநிலங்கள் இதை எதிர்ப்பது போலவே தமிழகத்திலும் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளாலும். சிறுபான்மை மற்றும் தலித் சமூகத்தினராலும் இக்கொள்கையானது கண்டனத்திற்குரியதாகி வருகிறது.
ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களும் கல்லியாளர்களுடன் இணைத்து நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் புதிய கல்விக் கொள்கை என்னும் பா.ஜ.க.வினரின் காவி செயல் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மாட்டிறைச்சியை வைத்து நடத்தப்படும் அடக்குமுறைகள் போதாதென்று, மாணவர்களின் கல்வியிலும் தனது காவி சிந்தனையை விதைக்கத் துடிப்பது மிக கண்டனத்துக்கு உரியதாகும்.
விரும்பியவர்கள் விரும்பிய மொழியிலும், மாநில அரசுகள் வகுத்திருக்கும் பாடத்திட்டங்களில் தங்களுக்கு விருப்பமானதையும் கற்க வழிவிடுமாறு பா.ஜ.க. அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
பன்முகத்தன்மையை சிதைக்கும், இந்த காவி கொள்கையை பாஜக அரசு திணிக்க முற்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் எச்சரித்து கொள்கிறது.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசூப்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஊடக பொறுப்பு
9789030302