70வது விடுதலை திருநாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார் மமக தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்..
அதனை தொடர்ந்து வட சென்னை மாவட்ட தமுமுக சார்பில் இராயபுரம், ஆர்கே நகர், பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல நூறு மக்கள் இதில் பயனடைந்தார்கள்.
விடுதலைத் திருநாளை கொடியேற்றி தேசிய கீதம் பாடி இனிப்பு பகிர்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் 22 ஆண்டுகளாக தமுமுக மருத்துவ முகாம்கள்,ரத்தத் தான முகாம்கள் நடத்தி தொடர்ந்து மக்களுக்கு சேவை ஆற்ற உறுதி எடுத்துக் கொள்கிறது.