ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக்ஸ் விளையாட்டும் உலக அரசியலும் ! இந்தியா ஒரு நாடு என்ற தகுதியை இழந்து விட்டது !



இப்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டின் பதக்க தரவரிசையை உற்று ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும். இது வெறும் விளையாட்டு மட்டுமே அல்ல. உலக நாடுகள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் களமாகவே ஒலிம்பிக் செயல்படுகிறது.
தற்போதுள்ள சூழலில் உலக நாடுகள் நேரடியாக போர் புரிந்து சண்டையிட்டு தங்கள் பலத்தை காட்ட இயலாது. ஆனால் உலக நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் ஒரு விளையாட்டு போட்டியில் தங்கள் பலத்தை காட்டவே இப்போட்டிகள் உலக வங்கியின் ஒத்துழைப்போடு நடைபெறுகிறது. இப்பதக்கப் பட்டியிலின் வாயிலாக தங்கள் இராணுவம் எப்படிப்பட்டது , தங்கள் மக்களின் உடல் பலம் எப்படிப்பட்டது என்பதை இந்த நாடுகள் உறுதி செய்கின்றன.
நாங்கள் வல்லரசு தான் , எங்களிடம் விளையாட்டில் மட்டுமல்ல இராணுவ ரீதியான போரில் கூட யாரும் மோதி விடாதீர்கள் என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியே ஒலிம்பிக் பதக்கப் பட்டியல். இப்பதக்கப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்க இந்த நாடுகள் கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சமல்ல. திட்டதிட்ட ஒரு நாட்டின் ராணுவத்திற்கு செலவிடும் தொகையை இந்த நாடுகள் தங்கள் விளையாட்டு வீரர்களுக்கு செலவிடுகிறது. இது குறித்த உண்மையை கூட அண்மையில் இந்திய துப்பாக்கி சுடும் வீரன் அபினவ் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டில் முதல் பத்து இடங்களின் வர முடியாத நாடுகளின் இராணுவம் கூட அந்த நாட்டின் விளையாட்டு வீரர்களைப் போலவே தகுதியற்றது தான் என்பதை உலக நாடுகள் அறியும். விளையாட்டிற்காக உருவாக்கப்படும் கட்டமைப்புகள், பயிற்சிகள், நிதி ஆகியவற்றிக்கு ஒரு நாடு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறதோ , அந்த அளவிற்கு அந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக, நிர்வாகத் திறன் கொண்ட நாடாக, ராணுவ பலம்கொண்ட நாடாக கருதப்படுகிறது . இன்றைய உலக ஒழுங்கில் இந்த நாடுகள் உலகை கட்டுப்படுத்தும் வலிமை கொண்ட சக்திகளாகவும் மாறுகிறது. ஒரு நாட்டு மக்களின் உடல் பலம், மன உறுதி எவ்வாறு உள்ளது என்பதை ஒலிம்பிக் களம் காட்டி கொடுத்து விடும். ஒலிம்பிக் அடுத்ததாக உலக நாடுகள் உற்று நோக்கும் களம் உலகக் கோப்பை கால்பந்து மட்டுமே ஆகும்.
தற்போது இந்தியா இருக்கும் அவல நிலையில் அது ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பத்து நாடுகளின் தரவரிசையில் இடம்பிடிக்க முடியாது. அதே போல கால்பந்திலும் எந்த காலத்திலும் முதல் பத்து இடங்களை இந்தியாவால் பிடிக்க இயலாது. அதனால் தான் இந்தி அரசும் இந்திய உளவுத் துறையும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை செயற்கையாக வளர்த்தனர். இந்திய மக்கள் சர்வதேச அரசியலை பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கும் எப்போதும் ஒரு விளையாட்டு போதையில் இருக்க வேண்டும் என்பதற்கும் உருவாக்கப் பட்டது தான் இந்திய கிரிக்கெட் வாரியம். இப்போது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், மீண்டும் இந்திய மக்களை கிரிக்கெட் போட்டிகளின் மேல் கவனம் செலுத்த வைப்பார்கள். மீண்டும் நான்கு ஆண்டுகள் கடந்தவுடன் திடீரென்று ஒலிம்பிக் போட்டியை பற்றி மக்கள் பேசுவார்கள். இது தான் தொடர்ச்சியாக நடக்கும்.
இந்தியா என்பது ஒரு நாடு என்ற தகுதியை உலக அரங்கில் இழந்து விட்டது. ஒலிம்பிக், கால்பந்து போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா சென்றால் கூட வல்லரசு நாடுகள் ' தம்பி கொஞ்சம் ஓரமாகப் போய் விளையாடு' என்று இந்தியாவை பார்த்து சொல்லும். இந்த அளவிற்கு ஒரு பலவீனமாக நிலையில் இந்தியா இருக்கையில், அதை மூடி மறைக்கவே நாட்டுப்பற்று போதை, பாகிஸ்தான் உடன் சண்டை, கிரிக்கெட் போன்ற காட்சிகளை உருவாக்கி இந்தி அரசு மக்களை இத்தனை ஆண்டுகள் ஏமாற்றி வருகிறது.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தன்னாட்சி அதிகாரமும், விளையாட்டுத் துறையில் முழு அதிகாரமும், நிதியும், மாநிலங்களுக்கு உலக அளவில் அங்கீகாரமும் பெற முடியும் என்றால் உலக நாடுகளை இந்திய ஒன்றியத்தில் உள்ள தேசங்கள் திரும்பிப் பார்க்க வைக்கும். அப்போது இந்தியாவில் உள்ள சில சிறிய தேசங்கள் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகளின் தரவரிசையில் இடம்பிடிக்கும்.

Medal standings
Country
1
United States
433736116
2
Great Britain
27221766
3
China
26182670
4
Russia
17171953
5
Germany
17101441
6
Japan
1282141
7
France
9171440
8
South Korea
93921
9
Australia
8111029
10
Italy
811726
11
Netherlands
86418
12
Hungary
83415
13
Spain
73414
14
Brazil
66618
15
Jamaica
63211
16
Kenya
56112
17
Croatia
53210
18
Cuba
52411
19
New Zealand
49518
20
Canada
431522
21
Kazakhstan
35917
22
Colombia
3238
23
Iran
3148
24
Greece
3126
25
Argentina
3104
26
Sweden
26311
27
South Africa
26210
28
Ukraine
25411
29
Poland
23611
30
North Korea
2327
30
Serbia
2327
32
Uzbekistan
2259
33
Belgium
2226
33
Switzerland
2226
33
Thailand
2226
36
Slovakia
2204
37
Georgia
2147
38
Denmark
16714
39
Azerbaijan
141015
40
Belarus
1449
41
Turkey
1348
42
Armenia
1304
43
Slovenia
1214
44
Indonesia
1203
45
Czech Republic
1179
46
Ethiopia
1157
47
Romania
1124
48
Bahrain
1102
48
Vietnam
1102
50
Chinese Taipei
1023
51
Bahamas
1012
51
Côte d'Ivoire
1012
51
Independent Olympic Athletes
1012
54
Fiji
1001
54
Jordan
1001
54
Kosovo
1001
54
Puerto Rico
1001
54
Singapore
1001
54
Tajikistan
1001
60
Malaysia
0415
61
Mexico
0325
62
Algeria
0202
62
Ireland
0202
64
Lithuania
0134
65
Venezuela
0123
66
Bulgaria
0112
66
India
0112
66
Mongolia
0112
69
Burundi
0101
69
Grenada
0101
69
Niger
0101
69
Philippines
0101
69
Qatar
0101
74
Norway
0044
75
Egypt
0033
75
Tunisia
0033
77
Israel
0022
78
Austria
0011
78
Dominican Republic
0011
78
Estonia
0011
78
Finland
0011
78
Morocco
0011
78
Moldova
0011
78
Nigeria
0011
78
Portugal
0011
78
Trinidad & Tobago
0011
78
United Arab Emirates
0011
source: kaalaimalar