வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஜிஎஸ்டி மசோதாவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா ‌சட்ட விரோதமானது என்றும் அது மாநிலங்களின் உரிமையை பறிப்பதாகவும் கூறி அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் தமிழகத்துக்கு 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என கவலை தெரிவித்தார். பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக நவநீதகிருஷ்ணன் கூறுகையில் ‘தற்போதைய ஜிஎஸ்டி மசோதா ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் இதன் மூலம் மீறப்படுகின்றன. வரி விதிப்பு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்படும். இது அரசியல் சட்டப் பிரிவு 21ஐ மீறுவதாகும்’ என்றார்.