கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை, தனது நாட்டின் 5வது மாகாணமாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதை இந்தியா ஒருபோதும் ஏற்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பிஜூ தனதா தள எம்.பி. பத்ருஹரி மஹதாப், தனது நாட்டின் 5வது மாகாணமாக கில்ஜித் பல்டிஸ்தானை பாகிஸ்தான் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, இதில் இந்திய அரசின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கில்ஜித் பல்டிஸ்தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின்படி தற்போதைய அரசு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி கில்ஜித் பல்டிஸ்தான் என சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். எனவே, பாகிஸ்தானின் 5வது மாகாணமாக கில்ஜித் பல்டிஸ்தானை அறிவித்திருப்பதை இந்தியா ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.