வியாழன், 27 ஏப்ரல், 2017

தமிழக அரசு தற்போது பலவீனமடைந்துள்ளதால் நீட் தேர்வுக்கு ஆதரவா?” : உயர்நீதிமன்றம் April 26, 2017

“தமிழக அரசு தற்போது பலவீனமடைந்துள்ளதால் நீட் தேர்வுக்கு ஆதரவா?” : உயர்நீதிமன்றம்


நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது பலவீனமடைந்துள்ளதால் நீட் தேர்வுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் உள்ளதா ? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்கையின்போது மாணவர்களுக்கு வழங்கும் கூடுதல் மதிப்பெண்களை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையை விளக்கி பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது பலவீனமடைந்துள்ளதா எனவும்,  நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதா எனவும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.