வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி! April 28, 2017




இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட அக்னி 3 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

கடந்த வாரம், இந்தியாவின் ஆற்றல் மிக்க சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ், கப்பலில் இருந்து செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முற்றிலும் வடிவமைக்கப்பட்ட அக்னி 3 ஏவுகணைச் சோதனை இன்று காலை நடந்தது.

ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து காலை ஏவுகணை செலுத்தப்பட்டது. சில நிமிடங்களில் ஏவுகணை  இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது. அக்னி 3 ஏவுகணை மூலம் 1.5 டன் கொண்ட அணு ஆயுதம் உள்ளிட்ட வெடி மருந்தைச் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

எட்டு டன் எடையும், 17 மீட்டர் உயரமும் கொண்ட அக்னி 3 ஏவுகணை 3000 கி.மீ தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாகும்.