வியாழன், 27 ஏப்ரல், 2017

இலங்கை இறுதிகட்டப் போரில் காணாமல் போனவர்களின் நிலை என்ன? April 27, 2017

 இலங்கை இறுதிகட்டப் போரில் காணாமல் போனவர்களின் நிலை என்ன?


இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து பொறுப்பான பதிலை அரசு அளிக்க வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது காணாமல் போன தமிழர்களை அந்நாட்டு ராணுவத்தினர் கொலை செய்துவிட்டதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவர்களை ராணுவத்தினர் கொலை செய்யவில்லை எனத் தெரிவிக்கும் அந்நாட்டு அரசு, அவர்கள் அனைவரையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

ஆனால், அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், காணாமல் போயிருந்தால் அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் வடமாகாண மாவட்ட நகரங்களான வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் அங்கு வர்த்தக நடவடிக்கைகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.