வியாழன், 27 ஏப்ரல், 2017

அடுத்தது இவர்கள்தான்! அதிரவைக்கும் ஹெச்.ராஜா ஃபேஸ்புக் பதிவு



டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்... 'அடுத்து, அ.தி.மு.க அமைச்சர்கள்' என்று அதிரவைத்துள்ளார், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.
அ.தி.மு.க பெயரையும்  இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துள்ள நிலையில், அதைக் கைப்பற்றும் முயற்சியில் பன்னீர்செல்வம் அணியினரும் பழனிசாமி அணியினரும் இறங்கியுள்ளனர். இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தைப் பெறும் முயற்சியில் டி.டி.வி.தினகரன் இறங்கியுள்ளார். இதற்காக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். முதல் கட்டமாக, 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் அளித்த வாக்குமூலத்தில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இதையடுத்து, தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்த டெல்லி காவல்துறையினர், அவரிடம் நான்கு நாள்கள் தீவிர விசாரணை நடத்தினர். 37 மணி நேர விசாரணைக்குப் பிறகு, நேற்றிரவு தினகரனை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தினகரன் கைதுசெய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனிடையே, முதல்வர் பழனிசாமி அமைச்சரவையை அதிரவைக்கும் வகையில், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளார். அதில், 'தினகரன் கைது. தமிழ்நாட்டில் இனி பல அரசியல் திருப்பங்கள் காத்திருக்கின்றன. தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது. அடுத்து, அ.தி.மு.க அமைச்சர்கள்? பொதுச்செயலாளர் பெங்களூரு சிறையில்!
துணைப் பொதுச்செயலாளர் திஹார் சிறையில்! அருமையான இயக்கம் அ.தி.மு.க!' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க அம்மா கட்சியின் தலைமைக்கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், 'டி.டி.வி.தினகரன் கைதுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் இன்று பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'டி.டி.வி.தினகரனை மேலும் விசாரித்தால், பல விஷயங்கள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது' என்று புதிரைக் கிளப்பினார்.




http://www.vikatan.com/news/tamilnadu/87584-hraja-shares-facebook-status-about-admk-cadres-arrest.html
சகாயராஜ் மு

 சகாயராஜ் 

Related Posts:

  • Hadis தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்ல… Read More
  • சமஉரிமை வழங்கி சமத்துவம் பேணி ‪#‎இஸ்லாம் நிகழ்த்திய அற்புதம்! கடவுளைக் காண(?) கதவை உடைத்த பக்தர்கள்(?) : - சிந்திப்பார்களா? அடைத்துவைத்த அறையிலிருந்து கடவுளை பார்க்க தடைபோட்டதால் கதவை உடைத்துக் கொண்டு… Read More
  • Jobs ஏக இறைவனின் திருப்பெயரால்...புரைதா மற்றும் ஜித்தாவில் இயங்கும் TVS கார்கோ நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை:லேபர்கள், டிரைவர்கள், சேல்ஸ்மேன்கள் தொடர்பு கொள்… Read More
  • மானம்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. நிர்வாண படம் என்பது ஆபாசமாக ஆகாது; அது பார்க்கக்கூடியவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்று உச்சநீதிமன்றம் ஒரு மானம்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது… Read More
  • மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?? முக்கிய செய்தி .. மாரடைப்பை தவிர்க்க .. தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?? மாலை மணி 6:30… Read More