சனி, 29 ஏப்ரல், 2017

சாதிய கட்டமைப்பை தூக்கிப்பிடிக்கிறதா பாகுபலி ? April 29, 2017




இந்தியாவின் சாதிய அமைப்பைப்பற்றி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் ராஜமவுலியை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர் இனையவாசிகள்.

கடந்த 2012-ம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ இந்தியாவின் சாதிய கட்டமைப்பை நாம் மனுஸ்மிருதி நூலில் இருந்துதான் கற்றுக்கொண்டோம். மனுஸ்மிருதி நூலானது நம்முடைய பிறப்பின் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல மாறாக நம் வாழ்க்கை முறையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு நூலாகும். என்னுடைய நண்பர் பிரசாத் என்பவர் மனுஸ்மிரிதியை பற்றி பல சிறப்பான விளக்கங்களை எனக்கு கொடுத்துள்ளார்.


பஞ்சம சாதியை சேர்ந்தவரக்ள்  தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பிறரை மட்டுமே நம்பி இருப்பவர்கள் ( அடைப்பு குறிக்குள் அவரக்ளை தீண்டத்தகாதவர்கள் என்று ராஜமவுலி குறிப்பிடுகிறார்).

சூத்திரர்கள் எனப்படுபவர்கள் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் மட்டுமே வாழ்பவர்கள்.

வைசியர்கள் வனிகம் செய்வது மூலமாக தானும், தன்னுடன் வியாபாரம் செய்யும் நபர்களுக்கும் சேர்த்து பொருளை சேர்க்கும் குணங்களை உடையவர்கள்.

சத்திரியர்கள் எனப்படுபவர்கள் தன் ஆளுகைக்கு கீழுள்ள அனைவரும் உணவு உண்ட பிறகே தாங்கள் உண்ணும் குணம் படைத்தவர்கள்.

பிராமணர்கள் கல்வியை முதலில் தாங்கள் கற்றுக்கொண்டு பிறகு மற்றவர்களுக்கு கற்பிப்பவர்கள்” என்று தன்னுடைய பதிவில் ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பல ‘பேண்டசி’ திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் ராஜமவலி, வெளிப்படையாகவே சாதிய அமைப்பை நியாயப்படுத்தி விளக்கங்களை கொடுத்திருப்பது முற்போக்காளர்களை மட்டுமில்லாது வெகுஜன மக்களையும் கோபத்திற்குள்ளாக வைத்துள்ளது. எனவே அவரது பழைய பதிவை 'screen shot' எடுத்த நெட்டிசன்கள், அதை  தங்களுடைய இனைய பக்கங்களில் பகிர்ந்து ராஜமவுலியை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.