வியாழன், 6 ஏப்ரல், 2017

புகைப்பிடிப்பவர்கள் பட்டியலில் உலக அளவில் இந்தியாவுக்கு 2ம் இடம்! April 06, 2017



உலகில் நிகழும் உயிரிழப்புகளில் புகைப் பிடிப்பதால் மட்டும் 11 சதவீதம் நிகழ்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்றிலல் தெரிய வந்துள்ளது. 

புகைப் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வின் முடிவுகள் The Lancet என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு, சர்வதேச அளவில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 11 சதவீதம் புகைப் பிடிப்பதால் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2015ம் ஆண்டு மட்டும், 6 கோடியே 4 லட்சம் பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த உயிரிழப்புகளில், சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய 4 நாடுகள், 52 சதவீதத்தைக் கொண்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் புகைப்பிடிப்பவர்களில் 11.2 சதவீதத்தினர் இந்தியர்கள் என்றும், கடந்த 2005-க் காட்டிலும், 2015ல் இந்தியாவில் புகைப் பிடிப்பதால் நிகழும் உயிரிழப்புகள் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது

Related Posts: