வியாழன், 27 ஏப்ரல், 2017

பல மணி நேர மின்வெட்டால் மக்கள் கடும் அவதி! April 27, 2017

பல மணி நேர மின்வெட்டால் மக்கள் கடும் அவதி!


ராயபுரம், ஆர்.கே நகர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் மின்வெட்டு நிலவுவதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கோடைகாலம் தொடங்கியதிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவி வருகிறது. முறையற்ற மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையின் உள்பகுதிகளில் சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் பல மணிநேரமாக மின்வெட்டு நிலவி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஏற்கன்வே கடும் அவதியில் இருக்கும் மக்கள், முன்னறிவப்பற்ற மின்சார நிறுத்தத்தால் மின்விசிறிகள், விளக்குகள் இயங்காததால் கடும் அவதியடைந்துள்ளனர்.

சென்னையின் பெரும்பாலான பகுதி மக்கள் தங்கள் வீட்டு வாசல்களிலும், மரத்தின் அடியிலும் மின்சாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், மின்சாரம் இல்லாததால் சமூக விரோதிகளால் வழிப்பறி சம்பவம் நடக்கும் அபாயம் இருப்பதால், காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வள்ளூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 2வது மற்றும் 3வது அலகுகளில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மின்விநியோகம் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென்று பல மணி நேரமாக மின்வெட்டு நிலவுவதால் நள்ளிரவில் கைது சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.