சனி, 29 ஏப்ரல், 2017

வேதிப்பொருட்கள் நிறைந்த நீரை பூமிக்கு அடியில் செலுத்தும் ONGC! April 29, 2017


வேதிப்பொருட்கள் நிறைந்த நீரை பூமிக்கு அடியில் செலுத்தும் ONGC!

நாகை அருகே பூமிக்கு அடியில் வேதிப்பொருட்கள் நிறைந்த நீரைச் செலுத்துவதை ONGC நிறுவனம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சியில் ONGC நிறுவனத்தின்  கச்சா எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த கிராமத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதனாலும், பின்னர் சுத்திகரிக்கபடாத, வேதிப்பொருள் நிறைந்த நீரை பூமிக்கு அடியில் செலுத்துவதாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

எனவே இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை எதிர்த்து எரவாஞ்சேரியை சுற்றியுள்ள வடகுத்தாலம், மத்தியகுடி உள்ளிட்ட கிராமமக்கள் பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பூமிக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் கிணறுகளை மூடவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.