சனி, 29 ஏப்ரல், 2017

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்! April 29, 2017



தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறுகிறது. 

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதற்கட்ட முகாம் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்  போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். 

சுமார்  2 லட்சம் பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

Related Posts:

  • சோற்றுக்கற்றாழை இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்… Read More
  • பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை 'மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை''- கண்களில் நீர் கசிய வைக்கும் ஹோட்டல் து பாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார்,விடுமுறைக்க… Read More
  • Hadis நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்று… Read More
  • தினசரி ஒரு 1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய… Read More
  • முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது – சோகமான உளவுத் தகவல் கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக மமக , பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா போன்ற கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட விருக்கிறது. இருப்பினும் முஸ்… Read More