ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

குடிநீருக்காக ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்! April 30, 2017

குடிநீருக்காக ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்!


தூத்துக்குடி அருகே நிலவிவரும் குடிநீர் பற்றாகுறையால் பல தொலைவு நடந்து, ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் அயன்பட்டி ஊராட்சியில் உள்ள வைப்பாற்றில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் பற்றாகுறை நிலவி வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக, வைப்பாற்றில் போடப்பட்டுள்ள கிணற்றில் வாளி மூலம் குடிநீர் எடுத்து தங்களின் தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

தங்களின் குடிநீர் தேவையை போக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.