ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்! April 30, 2017




தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு முதற்கட்ட முகாம் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் இன்று சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்  போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். சுமார்  2 லட்சம் பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 

5 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.