வியாழன், 27 ஏப்ரல், 2017

10-ல் ஒரு பெண்ணின் அந்தரங்க படங்கள் சமூக தளங்களில் லீக் ஆகிறது – ரிவஞ் பார்ன் அதிர்ச்சி!

இன்றைய உறவுகளில் இருக்கும் காதல், அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் போல, மாறிக் கொண்டே இருக்கிறது, எளிதாக மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போது சரியான நேரம் கிடைக்கும், வாரிவிடலாம் என கழுகு போல காத்திருக்கிறார்கள்.
ஒரு உறவில் கருத்துவேறுபாடு அல்லது ஏதேனும் தவறான காரணத்தால் பிரிந்துவிட்டீர்கள் என்றால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுவது இருவர் வாழ்விலும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்…
சமீபத்திய சர்வே ஒன்றில், தனது முன்னாள் துணை அல்லது காதலியின் அந்தரங்கள் படங்களை வெளியிடும் ரிவஞ் பார்ன் எனப்படும் குற்ற செயலால் பாதிக்கப்படுவது 90% பெண்கள் தான் என அறியப்பட்டுள்ளது. இந்த குற்றத்தால் ஆண்கள் மிகவும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு உறவில் இருந்து பிரிந்த பிறகு தனது முன்னாள் துணையின் அந்தரங்க படங்களை சமூக தளங்களில் பகிர்வது பிளாக் மெயில் செய்யும் செயலாக பின்பற்றுகின்றனர்.
தனது துணையை பழிவாங்க குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் ரகசிய கேமரா மாட்டுவது குற்ற செயல் ஆகும். இதை ஒருவர் சாதாரணமாக செய்தாலே குற்றம் தான்.
இந்த ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில், தன்னை பிரிந்து அந்த துணை நிம்மதியாக வாழ்கிறார் என அறியும் போது தான் பலர் ஈடுபடுகிறார்கள்.
சமீபத்திய ஆய்வில், உறவில் பிரிவை சந்தித்த பத்தில் ஒருவர் துணையின் அந்தரங்க படங்கள், வீடியோவை லீக் செய்து விடுவேன் என மிரட்டி ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில் ஈடுபடுவது அறியப்பட்டுள்ளது.
இந்த செயலால், மன ரீதியாக வலுவாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அனால், இந்த செயல்களில் ஈடுப்படுவது கிரிமினல் குற்ற செயலுக்கு கீழ் வருகிறது என்பதை பலரும் அறிவதில்லை.

Related Posts:

  • புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது.  இதை acid reflux என்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஆலோசனைகள் : நவீன மருத்துவத்தில் இதை GERD என்று குறிப்பிடுவார்கள். உணவுக் குழாய்க்கும் வயிற்… Read More
  • டான்சில் டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி. தொண்டையில் சதை வீங்குவதை டான்சில் என்று மக்கள் பொதுவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஐஸ்கிரீம் ச… Read More
  • ‪#‎SDPI‬ 25 தொகுதிகளில் போட்டி!! எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடும் தொகுதிகள்: ‪#‎பாளையங்கோட்டை‬, ‪#‎கடையநல்லூர்‬ , ‪#‎மதுரை‬(மத்தி),‪#‎திருவாடனை‬ ,&nbs… Read More
  • உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீண்டும் ஆயுள் தண்டனை.18 ஆண்டுகளைக் கழித்தவர்களுக்குமீண்டும் ஆயுள் தண்டனை. பாவிகளின் சட்டம், பாவமான தீர்ப்பு. யா அல்லாஹ். தாங்கிக்கொள்ள முடியாத ச… Read More
  • மூல வியாதி குணமாக: மூல வியாதி குணமாக: துத்திக் கீரை என்ற ஒன்றைகேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக்கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டுவந்தால் மூலநோய் தலைக் காட… Read More