வெள்ளி, 28 ஏப்ரல், 2017

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க கொரியாவுக்கு வேண்டுகோள்! April 28, 2017

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க கொரியாவுக்கு வேண்டுகோள்!


சர்வதேச சட்டங்களை மதித்து, பதற்றமேற்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என ஆசியான் நாடுகள் வடகொரியாவை வலியுறுத்தியுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாட்டுத் தலைவர்களின் 30வது மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைவர்கள் கூட்டம் முடிந்த பின் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை உடனடியாகக் கைவிடவும் வலியுறுத்தப்பட்டது. சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு நாளையும் நடைபெறவுள்ளது.