உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று மாணவர்கள் முடி வெட்டி பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ரிஷாப் அகாடமிக்கு சொந்தமான சிபிஎஸ்இ இருபாலின ஆங்கில பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள், மாணவிகளுடன் பேசாமல் இருக்கும் வகையில் தனித்தனியாக வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று மாணவர்கள் முடி வெட்டிவர வேண்டும் என்றும் புலால் உண்ணவும், தாடி வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் சிலர் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுத்ததற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி விதிமுறைகளில் யாருக்காகவும் மாற்றம் செய்ய முடியாது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.