ஒமந்தூரார் அரசு உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள இருதயவியல் பிரிவில் ஏ.சி.இயந்திரம் செயல்படாததால், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் உள்ள இருதயவியல் பிரிவு ஐ.சி.யு வார்டில், ஏ.சி. இயந்திரம் செயல்படவில்லை. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் மின் பொறியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
குளிர்சாதன இயந்திரத்தின் CHILLER பழுதானதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், நாளைக்குள் அது சரி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, ஒமந்தூரார் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட அறுவைச்சிகிச்சைகள், 20 நாள்களுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.