வியாழன், 27 ஏப்ரல், 2017

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் ! April 27, 2017

 மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !


லோக்பால் செயல்பாட்டை தாமதப்படுத்துவது நியாயமல்ல என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  

ஊழல் செய்யும் பொது ஊழியர்கள் குறித்து சாதாரண பாமரன் புகார் அளித்தால்கூட அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது. லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அது அமலுக்கு வரவில்லை. 

இதனிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளது. லோக்பால் சட்டம் அமல்படுத்துவதை தாமதப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. லோக்பால் தேர்வு குழுவில் மக்களவை எதிர்கட்சி தலைவர் இடம்பெறவேண்டும் என சட்டத்தில் உள்ளது. ஆனால் தற்போது மக்களவை எதிர்கட்சி தலைவர் இல்லாததால் லோக்பால் குழு செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது