ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

இருபிரிவினர் மோதலில் வாழ்விடத்தை இழந்து அகதிகளான 10 குடும்பங்கள்! April 30, 2017

மணப்பாறை அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால், 10 குடும்பங்களை சேர்ந்த 30 பேர், ஒவ்வொரு கிராமங்களாக சென்று அகதிகள் போல் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 
இருபிரிவினர் மோதலில் வாழ்விடத்தை இழந்து அகதிகளான 10 குடும்பங்கள்!

மணப்பாறை அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி கிராமத்தில், பொது பாதையை ஆக்கிரமித்து ஒருபிரிவினர் கழிவறை கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விதிமுறை மீறி கட்டப்பட்டதாக கூறி, இந்த கழிவறை மற்றொரு பிரிவினர் இடித்து தள்ளினர். 

இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அச்சம் அடைந்த 10 குடும்பத்தினர், கிராமத்தை காலி செய்துவிட்டு மற்றொரு கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர். 

நாடக கலைஞர்களான இவர்கள், மீண்டும் தங்கள் சொந்த கிராமத்தில் வாழ அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்கள் பிரச்னைகள் குறித்து அறிந்தும், அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.