உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவரை, காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவின் சார்பாக் ரயில்நிலையம் பகுதியில் சவாரிக்காக காத்திருந்த வயதான ரிக்ஷா தொழிலாளியை, அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த தொழிலாளியை அடித்து, தர தர வென்று போலீஸ் அதிகாரி இழுத்துச் சென்றார்.
வழியில், அந்த ரிக்ஷா தொழிலாளி கீழே விழுந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல், அந்த முதியவரை காவல்துறை அதிகாரி இழுத்துச் சென்ற காட்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.