ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

யம் சேவக் என்னும் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மதவாத அமைப்பின் பயிற்ச்சி முகாம்

இது மிக முக்கியமான பதிவு, வழக்கமாக கடந்து செல்வதை தவிர்க்கவும்..!!
நேற்று #PSN கல்லூரியில் RSS எனப்படும் சுயம் சேவக் என்னும் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மதவாத அமைப்பின் பயிற்ச்சி முகாம் நடப்பதாக தகவல் கிடைத்தது .
#DYFIதோழர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டோம் . போகும் முன் அங்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கக் கூடும் , அனுமதி மறுக்கப்படும் ,கல்லூரிக்கு விடுப்பு இருக்கும் என்றே நினைத்து சென்றோம் .
ஆனால் கல்லூரி நுழைவில் எவ்வித சலனமும் இல்லை , அந்த கல்லூரி வளாகம் கிட்டத்தட்ட இரண்டு ஊர்களை உள்ளடக்கம் செய்யும் அளவு பெரியது என்பது குறிப்பிடதக்கது .அந்த வளாகத்தில் பொறியில் கல்லூரி , மரைன் கல்லூரி ,பாலிடெக்னிக் கல்லூரி என மூன்று வளாகம் உண்டு. நாங்கள் எதிர்பார்த்த எதுவும் அங்கு இல்லை , கல்லூரி வழக்கம் போல் இயங்கியது , போலீஸ் இல்லை , எந்த ஒரு கொடிகளும் இல்லை .நுழைவு வாயிலில் வாட்ச்மெனிடம் அட்மிஷனுக்காக வந்திருக்கிறோம் என்று கூறி சென்றோம் . கல்லூரி வளாகம் மரங்கள் அதிகம் குழ்த்திருக்கும் , எங்களுக்கு வழி கண்டறிவதே சிரமமாகிப் போனது .
இறுதியில் பாலி டெக்னிக் மாணவர்களுக்கு விடுப்பு இருப்பதால் அங்கு வைத்து பயிற்ச்சி நடப்பதாக அறிந்தோம். அருகில் செல்லும் முன்பே தோரணமும் காவி கொடிகளும் கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் சென்று வரும் இடங்களெங்கும் வைக்கப்பட்டிருந்தது . பாலிடெக்னிக் கட்டிடம் கேன்டீன் அருகிலிருந்ததால் அனைத்து மாணவர்களும் வந்து செல்லும் இடமாக இருந்தது .
அந்த வளாகத்தின் இருபுறமும் காவிக்கொடி நடுவே சாலை வழியாக உள்ளே சென்றோம் , ஒரு பெரிய விளையாட்டு திடல் சுத்தபடுத்தப்பட்டு சில கோடுகள் வரையப்பட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது .
புகைபடங்களில் காணும் RSS பயிற்ச்சி கூடத்தின் அச்சு மாதிரியாகவே இருந்தது .அதை புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின்பு அந்த கட்டிடம் நோக்கி நகர்ந்தோம் சாலை முடிவில் ஆளுயர கம்புடன் ஒரு சிறுவன் முழு கால் காக்கி டவுசருடன் அமர்ந்திருந்தான் . "யார் நீங்க ? காலேஜ் ஸ்டுடன்ட்டா ? "என வினவினான் , நாங்கள் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம் , அவன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ,600 பேர் வந்திருப்பதாகவும், இரண்டாம் நிலை பயிற்ச்சி வடுப்பென்றும் மூன்றாம் நிலை வகுப்பு பெரிய அளவில் நடக்கும் என்று கூறினான், மேலும் 20 நாள்கள் பயிற்ச்சி , இது 8வது நாள் என்றும் கூறினான்.
பயிற்ச்சியில் என்ன நடக்கும் என கேட்டோம், கராத்தே , சிலம்பம் என எல்லா பயிற்ச்சியும் உண்டு என்றான் அத்துடன் அவைகளுக்கு வேறு பெயர் வைத்து குறிப்பிடுவோம் என்றான் .இவைகளை குறிப்பிட சமஸ்கிருதம் தான் முழுக்க முழுக்க பயன்படுத்துவோம் என்றான் .பின் கேன்டீன் சென்று திரும்பிய போது அந்த வகுப்பிற்க்குள்ளே நுழைய முயன்றோம் அனுமதி மறுத்துவிட்டர்கள். அங்கும் இங்கும் அரை டவுசர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர் , எல்லா தரப்பு வயதிலும் ஆட்கள் இருந்தனர் .
நாங்கள் வெளியேரும் போது மற்றொரு சிறுவன் காவலுக்கு நின்றிருந்தான் .அவன் 10ம் வகுப்பு முடித்த மாணவன் அவனிடம் எதற்க்கு இந்த அமைப்பில் சேர்ந்தீரகள் என்று கேட்டோம் , எங்கள் ஊர் சிவகங்கை அங்கே அதிகம் மக்கள் கிறிஸ்த்தவ மதத்திற்க்கு மாறுகிறார்கள் எனவே சேர்ந்தேன் என்றான் , மேலும் ஒரு மாவட்டத்தில் குறைந்தது 400 சாகா மையங்கள் இருப்பதாக கூறினான். அதிர்ந்து விட்டோம் அது எந்தளவு உண்மை என தெரியவில்லை.
10ம் வகுப்பு மாணவனை மத வெறியனாகவும் , மற்ற மதங்களை எதிர்ப்பவனாகவும் உருவாக்குவதோடு மட்டுமில்லாமல் , ஆயுத பயிற்ச்சிகளை வழங்கி வன்முறையாளனாக , இந்து மத பாதுகாவலன் என்று மூளைச்சலவை செய்து , வெறியனாக மாற்றும் இத்தகை அமைப்பை கல்லூரி வளாகத்தினுள் அதன் மத அடையாளங்களுடன் அனுமதித்துள்ளனர் .
மேலும் கல்லூரி இயல்பான நாட்களில் வெளிப்படையாக நடத்துகின்றனர் .இத்தகைய கல்லூரி , கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஒரு பெரும் போரட்டம் தேவை அதோடு மட்டுமல்லாது , ஒரு மதவாத அமைப்பின் அமைப்பு ரீதியான செயல்பாட்டின் தெளிவு பிரம்பிக்க வைக்கிறது , ஜனநாயக முற்போக்கு அமைப்புகளைக் காட்டிலும் இவர்களின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு நேர்த்தியாக உள்ளது , இதனை உள்வாங்கி இதை விட பண்மடங்கு அதிக உழைப்பையும் திட்டமிடலையும் ஜனநாயக சக்திகள் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
கிட்டத்தட்ட முன்று மடங்கு நான்கு மடங்கு உழைப்பை கொடுக்க வேண்டிய நேரம் .இப்போதய குழலில் உலகின் மிகப் பெரிய பாசிச அமைப்புடனான போராட்ட களத்தில் உள்ளோம் , வரலாற்றின் பக்கங்கள் நிரம்பி கொண்டு வருகின்றன , ஹிட்லராக , முசோலினியாக இப்போது நாம் தனி நபரை மட்டும் எதிர்க்க போவதில்லை, ஒரு மாபெரும் அதிகாரம் பொருத்திய கூட்டத்துடன் போராட போகிறோம் வரலாற்றின் பக்கங்கள் நம்மால் சரியாக நிரப்பப்பட வேண்டும்
Veeranam M.A.Muthalibu
https://www.facebook.com/mptkhanguys.in/photos/a.362789173858706.1073741827.362780747192882/937577389713212/?type=3&theater
Image may contain: text