ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்த கொலைக் குற்றவாளி எம்எல்ஏ! April 30, 2017

யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்த கொலைக் குற்றவாளி எம்எல்ஏ!


உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

உத்தரப்பிரதேசத்தில் மனைவியைக் கொன்ற வழக்கில் சிறை சென்ற அமன்மணி திரிபாதி என்பவர் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் போட்டியிட்ட சமயத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில், கோரக்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். 

இந்த விழாவில் எம்.எல்.ஏ. அமன்மணி திரிபாதி கலந்துகொண்டு யோகி ஆதித்யநாத்துடன் மேடையை பகிர்ந்துகொண்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் விழாக்களில் அமன்மணி திரிபாதியும் கலந்துகொள்வது அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமில்லாது பாஜகவினரும் இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Related Posts: