வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வடகொரியா மீதான விதிகளை இறுக்க அமெரிக்கா முடிவு! April 28, 2017

வடகொரியாவுக்கு எதிராக மேலும் சில பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தவும், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை இறுக்கவும் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் நிறுவப்பட்டுள்ள தாட் படைப்பிரிவைச் செயல்படுத்தும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இது குறித்து கூட்டறிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ், வடகொரியா அணு ஆயுதச் சோதனை மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடை செய்யும் விதமாக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வடகொரியாவுக்கு அழுத்தம் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வடகொரியா வழக்கமான பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.