ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாயம்! April 30, 2017



மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாயம்!
மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாய பண்ணைகள் அமைக்கும் சோதனை முயற்சி அமெரிக்காவில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நியூஜெர்ஸி மாகாணத்தில் இத்தகைய நவீன விவசாய முறையில் பயிர் வளர்ப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான விவசாய நிலத்தேவையை குறைத்திடுவதால், இம்முறை அந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது. 

இந்த பயிர் வளர்ப்புக் கூடங்களில் 250 வகை கீரைகள் உள்ளிட்ட சிறுபயிர்கள் விவசாயத்தை அந்நாட்டினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கான உள் அரங்குகளில் சிறிய சிறிய அடுக்கை அமைத்து, அதில் கீரை மற்றும் சிறு பயிர்களை வெற்றிகரமாக பயிரிட்டு வருகின்றனர். 

மேலும் சூரிய ஒளிக்கு பதிலாக மின்விளக்குகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அசத்தல் முறை தான் வருங்காலத்தின் விவசாயம் என்றும் அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.