
J.E.E. என அழைக்கப்படும் தேசிய தகுதித் தேர்வில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த கல்பித் வீர்வால் என்ற மாணவர், 360க்கு 360 மதிப்பெண்களை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
IIT, NIT, IIIT மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகள் உள்ள BE, B.Tech மற்றும் B.Arc படிப்புகளில் சேர CBSE வாரியம் தேசிய அளவிலான JEE தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்ரல் 2 மற்றும் 8 தேதிகளில் நாடு முழுவதும் உள்ள 1781 மையங்களில் நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கல்பித் வீர்வால் என்ற மாணவர், 360-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். கல்பிட்டின் தந்தை மருத்துவ உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.