புதன், 17 மே, 2017

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!


அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்ததையடுத்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். வேலை நிறுத்தப் போராட்டத்தை சமாளிக்க தமிழக அரசின் சார்பில் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

 இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோருடன் நடந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நிலுவைத் தொகை 1000 கோடி ரூபாயை தர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள நிலுவை தொகை செப்டம்பரில் வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related Posts: