புதன், 18 செப்டம்பர், 2019

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகத்!

credit ns7.tv
Image
2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு முதல் ஆளாக தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகத்.
கஜகஸ்தானின் நுர்-சுல்தான் நகரின் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் 53கி எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் பொகத் கலந்து கொண்டு முதல் சுற்றிலேயே ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வீடன் வீராங்கனை Sofia Mattsson-ஐ 13-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
இருப்பினும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனை Mayu Mukaida 7-0 என்ற புள்ளிக்கணக்கில் வினேஷை வீழ்த்தினார். இருப்பினும் Mayu Mukaida இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால் ரெபசாஜ் என்ற வாய்ப்பை வினேஷ் பொகத் பெற்றார். இதன் மூலம் அதிகபட்சமாக வெண்கலம் வெல்லும் வாய்ப்பை பெறலாம்.
முதல் ரெபசாஜ் சுற்றில் உக்ரைன் வீராங்கனையான Yuliia Khavaldzhy Blahinyaஐ 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வினேஷ் வீழ்த்தினார்.
இரண்டாவது ரெபசாஜ் சுற்றில் 53 கி எடை பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் Sarah Ann Hildebrandtஐ வினேஷ் எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட வினேஷ் பொகத் 8-2 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை வீழ்த்தி ஆச்சரியம் அளித்தார். இந்த வெற்றியின் மூலம் 2020ல் டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வினேஷ் தகுதி பெற்றுள்ளார்.
வெண்கலத்துக்கான போட்டியில் க்ரீஸ் நாட்டின் Maria Prevolaraki-ஐ எதிர்த்து வினேஷ் பொகத் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: