செவ்வாய், 17 செப்டம்பர், 2019

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு.!

Image
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பொதும்மக்களிடமும், மாணவர்களிடமும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியினரும், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு விதிவிலக்கு அளிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் எனவும், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும் என்றும் கூறினார். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்படி, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட செங்கோட்டையன், இதில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த 3 ஆண்டுகளானது மாணவர்கள், தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும் என தெரிவித்தார்.

credit ns7.tv