புதன், 18 செப்டம்பர், 2019

இந்திய தந்தி சட்டத்தை கைவிடக் கோரி நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது...!

Image
விவசாயிகளைப் பாதிக்கும், இந்திய தந்தி சட்டத்தை கைவிடக் கோரி, சேலத்தில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையிலான, 1885 ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தை கைவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும், உயர்மின் கோபுர திட்டங்களுக்கு மாற்றாக புதைவட கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டும் செல்லும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லி பாபு உள்ளிட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 
திருப்பூரில் உயர்மின் கோபுர திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கடந்த 1885 ஆம் ஆண்டு தந்தி சட்டத்தை எரித்திடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 

credit ns7.tv