செவ்வாய், 18 ஏப்ரல், 2017

எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி April 18, 2017




எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சமையல் காஸ் விலையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மானிய சுமையை குறைக்க சந்தை விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 22 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது போலவே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதனால் கூடுதல் மானியச்சுமை மற்றும் நஷ்டத்தை குறைக்க முடியும் என கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவால் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Related Posts: