தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை குறிவைப்பதன் மூலம் தனது குரலை ஒடுக்கிவிடலாம் என்கிற பாஜக அரசின் எண்ணம் பலிக்காது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என்றும் அவ்வாறு வந்தால் அதற்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமது மகன் மீது முற்றிலும் பொய்யான, வேடிக்கையான குற்றச்சாட்டுக்களை அமலாக்கத்துறை எழுப்பியுள்ளதாகக் கூறிய சிதம்பரம் தனது மகன் மீதான குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது மறுசுழற்சி செய்வது அமலாக்கத்துறையின் வாடிக்கையாகிவிட்டதாகத் தெரிவித்தார். இந்த மிரட்டல்கள் மூலம் தனது பேச்சையும் எழுத்தையும் பாஜகவால் நிறுத்திவிட முடியாது என்றும் சிதம்பரம் குறிப்பிட்டார்.