நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் தொடங்கிய போராட்டத்தின் 6 வது நாளான இன்று பாடைகட்டி ஒப்பாரி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசல் மற்றும் நல்லாண்டார்கொல்லை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய, மாநில அமைச்சர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி மற்றும் பரோடாவில் இருந்து ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களிடம் விளக்க 120 பேர் கொண்ட குழு நெடுவாசல் வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6வது நாளான இன்று ஹைட்ரோகார்பன் திட்ட உருவபொம்மைக்கு பாடைகட்டி நூற்றுக்கணக்கானோர் ஒப்பாரி வைத்து உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.