ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதத்தில் 90 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக மூன்று மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதத்தில் 90 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளிசரண் சரப் உத்தரவிட்டார்.
இது தொடர்பான விசாரணை அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அம்மருத்துவமனை முதல்வர் உட்பட மூன்று மருத்துவர்களை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஐந்து மருத்துவர்களின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நான்கு செவிலியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.