செவ்வாய், 5 செப்டம்பர், 2017

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2வது முறையாக அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்..!! September 04, 2017

​டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2வது முறையாக அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்..!!


மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க காலதாமதம் செய்ததால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். 

இதற்காக அருண் ஜெட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் உரிய காலத்திற்குள் பதிலளிக்காததற்கு கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

இதனிடையே, தன்னை குறித்து தகாத வார்த்தைகளால் பேசுவதாக அருண் ஜெட்லி கூறிய புகாருக்கு பதிலளிக்காமல்,  கெஜ்ரிவால் காலதாமதம் செய்ததால் அவருக்கு மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.