செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல் September 12, 2017


இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் தீவிர முயற்சியின் பேரில் சமீபத்தில் இலங்கை சிறையிலிருந்து சுமார் 80 தமிழக மீனவர்கள் விடுதலையாகி தாயகம் திரும்பினர்.

இதனால் மீனவர்களுக்கு ஏற்பட்ட ஆறுதல் நீங்குவதற்குள் அடுத்த அத்துமீறலை நிகழ்த்தியுள்ளது இலங்கை கடற்படை. 

பாக்ஜலசந்தி கடற்பகுதியில் நெடுந்தீவு அருகே நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  

Related Posts: