வெள்ளி, 19 மார்ச், 2021

வாக்காளர் அட்டை இல்லையா? இந்த 11-ல் ஏதேனும் ஒன்று போதும்!

  தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்கள் அட்டை மிகவும் அவசியமான ஆவணம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாதவர்கள் இந்த 11 ஆவணங்களில் எதாவது ஒன்றை பயன்படுத்தி தங்கள் வாக்குளை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.

1) ஆதார் அட்டை

2) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டபணி அட்டை

3) புகைப்படத்துடன் கூடிய அஞ்சலக வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்

4) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

5) ஓட்டுநர் உரிமம்

6) நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு)

7) தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

8) கடவுச்சீட்டு (பாஸ் போர்ட்)

9) புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்

10) மத்திய – மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11) புகைப்படத்துடன் கூடிய நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

source https://tamil.indianexpress.com/technology/voter-id-tamil-news-list-of-documents-instead-of-voter-id-card-to-cast-vote-284145/