இணையம் பெண்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியிருந்தாலும், இது மிகவும் பொதுவான தளம் என்ற அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பலர் பாதுகாப்பற்றதாக உணரும் இடமாகவும் இருக்கலாம். சமூக வலைதளங்களில், அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு என்பது பெண்களுக்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஃபேஸ்புக்கில் அந்நியர்கள் செய்தி அனுப்புவது முதல் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் தேவையற்ற கருத்துகள் வரை, சமூக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்கள் உள்ளன. இந்த இரு தளங்களிலும் பாதுகாப்பாக இருக்க ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் இங்கே.
ஃபேஸ்புக்கில் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைப்பதற்கான உதவிக்குறிப்புகள்
2-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் மற்றும் அங்கீகரிக்கப்படாத உள்நுழைவுகளைத் தவிர்ப்பது
உங்கள் கணக்கு வேறு யாராலும் அணுகப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த இது மிக முக்கியம். உங்கள் சுயவிவர கடவுச்சொல்லை யாருடனும் பகிரக்கூடாது என்று ஃபேஸ்புக் பரிந்துரைக்கிறது. மேலும், ‘2-ஃபேக்டர் ஆதென்டிகேஷன்’ என்பது பாதுகாப்பின் கூடுதல் அடுக்கு. எந்தவொரு அங்கீகரிக்கப்படாத உள்நுழைவுகளையும் கண்காணிக்க பெண்கள் ‘Unrecognised Login Alerts’ இயக்கலாம்.
2 ஃபேக்டர் ஆதென்டிகேஷன் இயக்க, அமைப்புகள்> பாதுகாப்பு மற்றும் உள்நுழைவு> இரண்டு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்> திருத்து> இயக்கு> மூடு.
உள்நுழைவு அலெர்ட்டை அமைக்க, அமைப்புகள்> பாதுகாப்பு மற்றும் உள்நுழைவு> அங்கீகரிக்கப்படாத உள்நுழைவுகளைப் பற்றிய அலெர்ட்டுகளை பெறுக> திருத்து> அலெர்ட் வகைகளைத் தேர்வுசெய்க (எடுத்துக்காட்டாக மின்னஞ்சல் அலெர்ட்)> மாற்றங்களைச் சேமி. அந்தக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் இன்ஸ்டாகிராமில் 2 ஃபேக்டர் அங்கீகாரத்தையும் அமைக்கலாம்.
உங்கள் சுயவிவரத்தை பாதுகாக்க
நீங்கள் அந்நியர்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் சுயவிவரத்தை அணுகுவது மற்றும் பொதுவில் காணக்கூடிய புகைப்படங்களைத் திருடுவது போன்ற நடவ்டிக்கையிலிருந்து விடுபட, பாதுகாப்பு கண்ணோட்டத்தில் உங்கள் சுயவிவரத்தைப் லாக் செய்வது முக்கியம். உங்கள் சுயவிவரத்தை நீங்கள் லாக் செய்யும்போது, உங்கள் ஃபேஸ்புக் நண்பராக இல்லாத எவரும் இனி உங்கள் காலவரிசையில் எந்த புகைப்படங்களையும் போஸ்ட்களையும் அணுக முடியாது. இதன் பொருள் அவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பதுதான்.
ஃபேஸ்புக் மொபைல் பயன்பாட்டைத் திறந்து, உங்கள் சுயவிவரத்தை க்ளிக் செய்யவும். பிறகு ‘கதைக்குச் சேர்’ என்பதற்கு அடுத்த மூன்று புள்ளி மெனு ஐகானை க்ளிக் செய்யவும்.
சுயவிவர விருப்பத்தை முடக்கு என்பதை க்ளிக் செய்து சரி என்பதைத் தட்டவும்.
உங்கள் ஃபேஸ்புக் காலவரிசையில் யார் என்ன பார்க்கிறார்கள் என்பதைத் தேர்வுசெய்க
உங்கள் ஸ்டேட்டஸை நீங்கள் புதுப்பிக்கும்போது அல்லது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும்போது, “பார்வையாளர் தேர்வாளர்” கருவியை கொண்டு பார்வையாளர்களை கட்டுப்படுத்தலாம். அனைவருடனும் பகிர்வதைத் தேர்வுசெய்ய ஃபேஸ்புக் உங்களை அனுமதிக்கிறது, அதாவது இது பொதுவில் கிடைக்கிறது அல்லது உங்கள் நண்பர்களுடனோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் குழுவுடனோ பகிரவும் ஆப்ஷன்ஸ் வழங்குகிறது.
போஸ்ட் செய்யும்போது, உங்கள் பெயருக்குக் கீழே, ‘பார்வையாளர் தேர்வாளர்’ விருப்பத்தைக் காண்பீர்கள்.
அதைக் கிளிக் செய்து, உங்கள் போஸ்ட் எந்த பார்வையாளர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்க.
போஸ்ட் செய்த பிறகும் அமைப்பை மாற்றலாம். போஸ்டிற்கு மேல் வலதுபுறத்தில் க்ளிக் செய்யவும். போஸ்டிங் தனியுரிமை அமைப்புகளைத் திருத்தி புதிய பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பாக இருக்க உதவிக்குறிப்புகள்
உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை தனிப்பட்டதாக வைத்திருங்கள்
இன்ஸ்டாகிராமில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஒரு கவலையாக இருந்தால், தனியார் கணக்கிற்கு மாறுவது நல்லது. அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே உங்கள் கணக்கைப் பின்தொடர முடியும். மேலும், அவர்கள் உங்கள் கணக்கைப் பார்க்கக் கோர வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பின் தொடர்பவர்களுக்கு மட்டுமே உங்கள் உள்ளடக்கம் தெரியும். தனிப்பட்ட கணக்குகள் பயனர்கள் தங்கள் போஸ்டில் யாரும் கருத்து தெரிவிக்கலாம் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கின்றன. மேலும், பயனர் “செயல்பாட்டு நிலையைக் காட்டு” என்பதை முடக்கலாம். இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது உங்கள் நண்பர்கள் பார்க்க முடியாது.
கணக்கைத் தனிப்பட்டதாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
# இன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
# மேல் வலதுபுறத்தில் க்ளிக் செய்து, பின்னர் நான்கு வரிகளைக் கொண்ட அமைப்புகளைத் தட்டவும்.
# தனியுரிமையை க்ளிக் செய்து, பின்னர் கணக்கு தனியுரிமையைத் தட்டவும்.
# உங்கள் கணக்கைத் தனிப்பட்டதாக்க தனியார் கணக்கிற்கு அடுத்து க்ளிக் செய்யவும்.
source Indianexpress.com