வியாழன், 11 மார்ச், 2021

தவறுகளை மறைக்க முயலுகிறது பாஜக; சட்டமன்றத்தை கலைக்க காங்கிரஸ் கோரிக்கை

Bid to cover up misdeeds: Cong seeks dismissal of Uttarakhand govt, dares polls :  உத்தரகாண்டில் முதல்வரை மாற்றுவதன் மூலம் பாஜக, தோல்விகள், தவறான செயல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாற்றுகளை மறைக்க மேற்கொள்ளும் ஒரு பயனற்ற முயற்சி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் செவ்வாயன்று சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் தேர்தல்களை சந்திக்கவும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் த்ரிவேந்திர சிங் ரவாத் முதல்வர் பதவியில் இருந்து விலகியது மட்டும் போதுமான நடவடிக்கை இல்லை என்றும் கூறியுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பு நைனிடால் உயர்நீதிமன்றம், முன்னாள் முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது. வேலையின்மை, மாநிலத்தின் வளர்ச்சி, கும்பின் ஊழல் மற்றும் முறைகேடு, வன காவலர்களை நியமிப்பதில் முறைகேடுகள்… பின்தங்கிய குழந்தைகளுக்கான மதிய உணவு கிடைப்பதில் சிக்கல் என்று இந்த அரசாங்கம் ஒரு முழுமையான தோல்வியாக இருந்தது. இந்த விவகாரங்கள் எல்லாம் மக்கள் மனதில் புதியவையாக இருக்கிறது என்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளரான தேவேந்திர யாதவ் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாஜக இதுவரை செய்த பாவங்களை கழுவ முடியாது. நிச்சயமாக 2022 ம் ஆண்டு தேர்தலில் பாஜக கப்பல் கவிழ்ந்துவிடும் என்று கூறியுள்ளார்


source https://tamil.indianexpress.com/india/bid-to-cover-up-misdeeds-cong-seeks-dismissal-of-uttarakhand-govt-dares-polls-251688/