தமிழக சட்டசபைதேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சேலம் மாவட்டம் சீலநாய்க்கன்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தியா பல்வேறு மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இதில் எந்த மொழியம், கலாச்சாரமும், ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்த்து இல்லை. ஆனால் தமிழர் கலாச்சாரம் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவில் ஒரே மொழி என்பது ஏற்க முடியாத ஒன்று. இப்போது கொரோனா காலத்தில் அனைவரும் முக்கவசம் அணிந்துள்ளனர். இதில் அவர்களின் முகபாவனைகள் என்ன என்பது நமக்கு தெரியாது. ஆனால் அதிமுகவின் முககவசத்தை திறந்தால் அதில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் முகம் இருக்கும். தமிழகர்கள் யாரும் அடுத்தவரிடம் தலைகுனிந்து நிற்கமாட்டார்கள். ஆனால் தமிழக முதல்வர், மோடி, அமித்ஷா முன்னிலையில் தலைகுணிந்து நிற்கிறார். இதன் மூலம் அவர் தவறு செய்துள்ளது தெளிவாக தெரிகிறது.
எனக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும், மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளும் அளவுக்கு திறமை உள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் ஆகிய 3 சட்டங்களினால் இந்தியாவில் சிறு குறு விவசாயிகள் பெரும் தாக்குதலை சந்தித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேட்க முதல்வருக்கு தைரியம் உள்ளதா? பணபலம் உள்ள பாஜகவை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தால் தான் டெல்லியில் இருந்து அவர்களை விரட்ட முடியும். தமிழகத்தின் மீது சிறு அக்கறை மரியதை செலுத்தினால் அது மக்களிடம் இருந்து அதிக அளிவில் திரும்ப கிடைக்கும். இதை மோடி புரிந்துகொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது எழுதி வைத்த ஒன்று. இதனை மக்கள் வாக்குப்பதிவில் நிறைவேற்றுவார்கள்.
நாட்டின் உற்பத்தி தலைநகராக உள்ள தமிழகத்தை மதிக்காமல் இந்தியா இருந்துவிட முடியாது. தமிழகம் இல்லை என்றால் இந்தியா என்பதே இல்லை என்று கூறிய ராகுல்காந்தி எனது பாட்டி காலத்தில் தொடங்கி தற்போது வரை தமிழக மக்கள் அன்பும் ஆதரவும் அளித்து வருகின்றனர் என்று கூறினார்
source : https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-2021-rahul-gandhi-campaign-in-salem-286622/