சனி, 13 மார்ச், 2021

திமுக வேட்பாளர் பட்டியலின் முக்கிய அம்சங்கள்; 12 பெண்கள், 9 மருத்துவர்கள் போட்டி

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில், 78 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, 12 பெண்களும் 9 மருத்துவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது முக்கிய அம்சமாக கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐ.யூ.எம்.எல், மமக, கொ.ம.தே.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐயூஎம்எல் 3 இடங்களில் தனிச் சின்னத்திலும் மமக 2 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. அதே போல, கொ.ம.தே.க 3 இடங்களிலும், தவாக, மவிக, அதி தமிழர் பேரவை தலா 1 இடத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் திமுக அணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களைத் தவிர்த்து மற்ற 173 தொகுதிகளுக்கான வேட்பாளகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

திமுகவின் இந்த வேட்பாளர்கள் பட்டியலில் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை காண்போம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 10வது முறையாக போட்டியிடுகிறார்.

மு.க.ஸ்டாலினின் மகனும் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக தேர்தல் களம் காண்கிறார்.

திமுகவில் இந்த சடமன்றத் தேர்தலில் 25 தனித் தொகுதிகளிப் போட்டியிடுகிறது.

திமுகவில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 78 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 12 பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக, திமுகவில் இந்த சட்டமன்றத் தேர்தலில் எழிலன், பூங்கோதை ஆலடி அருணா, முத்துராஜா, மதிவேந்தன், தருண், லட்சுமணன், மாசிலாமணி, பிரபு ராஜசேகர், வரதராஜன் மருத்துவர்கள் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த லட்சுமணன், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன், மார்க்கண்டேயன் ஆகிய 5 பேருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

அதே போல, தமிழக சட்டமன்றத் தேர்தலில் மநீம சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அண்மையில், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ கருப்பையா போட்டியிடுகிறார். மநீம சார்பில் நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

source https://tamil.indianexpress.com/election/dmk-candidates-list-important-and-highlights-282970/