திங்கள், 8 மார்ச், 2021

இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்

 உத்தரப் பிரதேசத்தில் ‘அயோத்தி ஆராய்ச்சி மையம்’ சார்பில் ராமாயணம் குறித்துக் கலை களஞ்சியம் (Encyclopedia) மற்றும் ‘ e-book’ புத்தகங்களை வெளியிட்டு நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.


அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டிட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் ராமாயணம் குறித்து புத்தகம் வெளிவந்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. உலகளவில் இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டு செல்ல ‘மதச்சார்பின்மை’தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது
ராமாயணமும் மகாபாரதமும் இந்திய எல்லைகளை விரிவடையக் காரணமாக இருந்துள்ளது. ராமர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன்னுடைய தம்பி மகனை தற்போது பாகிஸ்தான் உள்ள பகுதிக்கு அரசராக நியமித்தார்.
தற்போதும் சிலர் ராமர் அயோத்தியில் ஆட்சி செய்தாரா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் “வரலாற்றை யாராலும் மறுக்கமுடியாது” என்றார்.


source : https://www.news7tamil.live/uttar-pradesh-chief-minister-secularism-is-the-biggest-threat.html