புதன், 10 மார்ச், 2021

ஓவைசி; கூட்டணி அமைக்க காரணம் என்ன?

 டிடிவி தினகரனின் அமமுக கட்சி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (ஏ.ஐ.எம்.எம்) கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. வி.கே.சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், தினகரன் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளார். தமிழகத்தில் புதுமுகமாக இருக்கும் ஓவைஸியை ஏன் தினகரன் தேர்வு செய்தார் என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு கட்டுரை.

ஏன் ஓவைஸியின் கட்சி

இது மிகவும் தாமதமானதால் தினகரனால் தமிழகத்தில் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்திருக்க இயலாது. தினகரனின் அனைத்து சாத்தியமான கூட்டாளிகளும் அல்லது சசிகலா குடும்பத்துடன் நீண்டகாலம் நட்புறவு கொண்டவர்களும் சில நாட்களுக்கு முன்பே மற்ற கூட்டணியில் இணைந்தனர். வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லாத போதிலும் கூட, நன்றாக நிறுவப்பட்ட கட்சிகளுக்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் இணைந்து தினகரன் ஒரு சேதத்தை ஏற்படுத்த முடியும் என்ற சமிக்ஞையை அனுப்பியுள்ளார்.

ஒப்பந்தம்

அமமுகவின் ஒப்பந்தத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கும் வாணியம்பாடி, சங்கராபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. அமமுக இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் போட்டியிடுவதாக கூறியுள்ளது. தமிழகத்தில் ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பிரதானமாக இல்லை. இருப்பினும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடியில் 10 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. ஓவைஸியின் கட்சிக்கு கிடைக்கும் எந்த ஒரு வாக்கும், திமுகவின் வெற்றிக்கு பாதகமாக அமையும்.

இஸ்லாமியர்களின் வாக்குகள்

மறைந்த ஜெயலலிதா, சிறுபான்மை சமூகங்களிடம் இருந்து பெற்ற ஆதரவை, பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக இனி பெற முடியாது. அனைத்து பெரிய இஸ்லாமிய கட்சிகளும் தற்போது திமுகவின் கூட்டணியில் உள்ளன. கடையநல்லூர், ராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் எம்.எச். ஜவஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் மற்றும் பாளையம்கோட்டையில் நல்ல செல்வாக்கு உள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் சின்னத்தில்நின்ரு 2016ம் ஆண்டு வெற்றி பெற்றது. திங்கள் கிழமை அன்று திமுகவிற்கு ஆதரவு அளித்திருந்த போதிலும் கூட்டணியில் போட்டியிட இருக்கும் வாய்ப்புகள் குறித்து உறுதி செய்யப்படவில்லை. பாஜகவின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த தமிமும் அன்சாரி, இந்த சட்டத்திற்கு எதிராக அதிமுக ஏன் பேசவில்லை என்ற கேள்விகளையும் எழுப்பினார்.

source : https://tamil.indianexpress.com/explained/dhinakaran-owaisi-why-they-add-up-to-enough-251504/