Puducherry Assembly Election : பாஜக மீதான புகாரின் விசாரணை முடிவுக்கு வரும்வரை ஏன் புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நாளை முதல் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கடசியான பாஜக, புதுச்சேரியில், என்ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியின் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்களின் செல்போன் எண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பிரச்சாரம் செய்வதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாஜக தொகுதிவாரியாக குழுக்களை அமைத்து வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதில் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இருக்கும் என்பதால், அவர்கள் ஆதார் ஆணையத்தில் இருந்துதான் வாக்காளர்களின் செல்போன் எண்களை பெற்று பிரச்சாரம்தில் ஈடுபடுவதாக மனுதார்ர் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் அவர்களின் இந்த நடவடிகைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக சட்ட ரீதியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இது தொடர்பாக நடத்திய சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜக வாக்காளர்களுக்கு மொத்தமாக மெசேஜ் அனுப்ப, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கவில் என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 7-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸ்க்கு பாஜக தரப்பில் விளக்கம் அளிக்காத நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்த ஆதார் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பாஜக மீதான புகாரின் விசாரணை முடிவுக்கு வரும் வரை ஏன் புதுச்சேரி சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து இது தொடர்பாக ஆதார் ஆணையம் நியாயமான முறையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
source https://tamil.indianexpress.com/election/puducherry-assembly-election-postponed-chennai-high-court-285973/