திங்கள், 29 மார்ச், 2021

கொரோனா 2வது அலை முதல் அலையைவிட மோசமாக இருக்கும் ஏன்?

 இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையின் மிக முக்கியமான அம்சம், நோய்த்தொற்றுகளின் எணிக்கை வளர்ந்து வரும் வேகம் ஆகும். வெள்ளிக்கிழமை, நாட்டில் 62,000 க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பத்து நாட்களுக்கு முன்பு, இந்த தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாக இருந்தது.

கடந்த முறை, இந்தியாவில் ஒரு நாளைக்கு 30,000 தொற்றுகளில் இருந்து 60,000 தொற்றுகளாக மாற 23 நாட்கள் ஆனது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அந்த நேரத்தில், தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட விகித அளவு பாதித்த பின்னர், தொற்றுநோய் பரவுதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட விகிதம் 50 சதவீதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் தொகையில் 30 அல்லது 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்ட பின்னரும் மந்தநிலை ஏற்படலாம். நோய்த்தொற்று ஏற்படாத நபர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதே இதற்குக் காரணம்.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டது. செப்டம்பர் நடுப்பகுதியில் உச்ச நிலை அடைந்த பிறகு, சமூகத்தில் முக்கியமான தொற்று அளவு ஏற்கனவே எட்டப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கைய ஏற்படுத்தியது. மேலும், ஒரு புதிய அலைக்கான சாத்தியம் இருப்பதை நிராகரிகப்படவிலை என்றாலும், அது செப்டம்பரில் அடைந்த தொற்றின் அளவை ஒப்பிடும்போது அவை குறைந்த அளவுடன் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், புதிய தொற்றுகள் கண்டறியப்படும் விகிதத்தில், செப்டம்பர் மாதம் அடைந்த உச்ச அளவை தாண்டுவதற்கான உண்மையான அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிகிறது. இப்போது வரை, இரண்டாவது அலை முதன்மையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய நாடுகளும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஒரே நாளில் அதிக தொற்று எண்ணிக்கையைக் கண்டறிந்தது. ஆனால், அவற்றின் முந்தைய தொற்று உச்சங்கள் மகாராஷ்டிராவின் 10-ல் ஒரு பங்கு ஆகும்.

கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இப்போதே கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் எழுச்சியைக் காட்டத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் கேரளா தவிர, ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ள இரண்டு மாநிலங்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 2 மாநிலங்கள் ஆகும். தமிழ்நாட்டின் அதிகபட்ச தொற்று அளவின் உச்ச எண்ணிகை 7,000ம் ஆகும். பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஒரு நாளைக்கு 500-க்கும் குறைவான எண்ணிக்கையில் தொற்றுகளைக் கண்டறிந்த நிலையில், இப்போது இண்த மாநிலங்கள் சுமார் 2,000 தொற்றுகளைக் கண்டறிந்துள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் ஆந்திராவின் தினசரி தொற்று எண்ணிக்கை இரட்டை இலக்கமாகக் குறைந்தது. இப்போது ஒரு நாளைக்கு 1,000 தொற்றுகளை நெருங்கி பதிவாகி வருகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா வழியில் சென்று, அதன் முந்தைய உச்சங்களைவிட அதிகமாக இருந்தால், இந்தியாவின் இரண்டாவது அலை முதல் அலையைவிட மோசமாக இருக்கும்.

ஏனென்றால், நாட்டின் முதல் 5 அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் 3 மாநிலங்கள் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் 2வது அலைகளால் இன்னும் பெரியதாக பாதிக்கப்படவில்லை. மேலும், தொற்றுநோய்க்கு எதிராக அவர்களுக்கு சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நம்புவதற்கு எதுவும் இல்லை. பீகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் தொற்று எண்ணிக்கை கடந்த முறை சுமார் 4,000 ஆக உயர்ந்த நிலையில், உத்தரப்பிரதேசம் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் 7,000க்கு மேல் தொற்றுகளை பதிவு செய்திருந்தது. மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாமிலும் தேர்தல் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல் பொதுக் கூட்டங்களில் பெரும் கூட்டம் பங்கேற்கிறது. அங்கே தாமதமான தொற்று எழுச்சி சாத்தியம் என்பதை பஞ்சாபின் அனுபவம் காட்டுகிறது. ஒடிசா, தெலங்கானா போன்ற மாநிலங்களும் இப்போது பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற அதே அளவுக்குள் வருகின்றன.

இரண்டாவது அலையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஒரு சில மாநிலங்களில் அதிக அளவில் தொற்றுகளின் எண்ணிக்கை இருப்பது ஆகும். மகாராஷ்டிரா ஒவ்வொரு நாளும் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுகளை பங்களித்து வருகிறது. தொற்றுநோய் காலம் முழுவதும் பெரும்பாலான நாட்களில் இந்த மாநிலம் தொற்று எண்ணிக்கையில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது ஆனால், அதன் அன்றாட தொற்று எண்ணிக்கை பங்களிப்பு 40 சதவீதத்தை கூட எட்டவில்லை. தற்போது வரை 26.37 லட்சத்துக்கும் மேல் கண்டறியப்பட்ட தொற்றுகள், கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இந்தியாவில் கண்டறியப்பட்ட அனைத்து தொற்றுகளிலும் இது 22 சதவீதமாக உள்ளது. ஆனால், பிப்ரவரி 2வது வாரத்தில் தொடங்கிய இரண்டாவது அலையின்போது, ​​அதன் பங்களிப்பு 56 சதவீதம் என அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் இருந்து பதிவான 10.5 லட்சத்தில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் மகாராஷ்டிரா பங்களிப்பு செய்துள்ளது.

தற்போது நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுகள் மகாராஷ்டிராவில் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது 2.83 லட்சத்துக்கும் மேல் கொரோன தொற்று நோயாளிகள் உள்ளனர். மாநிலத்தில் புதிய தொற்றுகள் கண்டறியும் விகிதத்தில், அது சனிக்கிழமை 3 லட்சத்தை தாண்டக்கூடும். கடந்த ஆண்டு, கொரோனா தொற்று எண்ணிக்கையில் சரிவு தொடங்குவதற்கு முன்னர், அதன் செயலில் உள்ள தொற்றுகளின் 3.01 லட்சமாக அதிகரித்துள்ளன. செயலில் உள்ள தொற்று எண்ணிக்கை பிப்ரவரியில் 30,000 ஆகக் குறைந்தது. செயலில் உள்ள தொற்றுகளில் பத்து மடங்கு உயர்வு வெறும் 43 நாட்களில் நிகழ்ந்துள்ளது. கடைசியாக, மகாராஷ்டிராவில் செயலில் உள்ள தொற்றுகள் 30,000 முதல் 3 லட்சமாக உயர 110 நாட்களுக்கு மேல் எடுத்தது.

மகாராஷ்டிராவில் சுகாதார உள்கட்டமைப்பு கடந்த முறை இருந்ததைப் போலவே இன்னும் மோசமாக இல்லை என்பதுதான் ஆறுதல். கடந்த ஆண்டு கட்டப்பட்ட வசதிகள், மற்றும் ஒரு எழுச்சியைக் கையாள்வதில் அனுபவம் ஆகியவை ஒரு பங்கைக் கொண்டுள்ளன. ஆனால், எல்லா ஆதாரங்களும் இரண்டாவது அலைகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் நோயின் ஒப்பீட்டளவில் லேசான வடிவத்தை விளைவிப்பதாக கூறுகின்றன. ஆனால், இந்த நிலைமை விரைவில் மாற வாய்ப்புள்ளது. 50,000 க்கு மேல் செயலில் உள்ள புனேவில் உள்ள பல மருத்துவமனைகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பதிவாகியுள்ளனர். 40,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் உள்ள மும்பையில் நிலைமை மிகவும் வேறுபட்டதல்ல.

இப்போதைக்கு, இந்த இரண்டாவது அலை எப்போது வேண்டுமானாலும் விரைவில் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஒரு முறை 98,000 தொற்றுகளை எட்டிய பின்னர் குறையத் தொடங்கியபோது, ​​கடைசி நேரத்தைப் போல அது திடீரென்று மீண்டும் குறையக்கூடும். அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதோடு, ஒரு பெரிய அளவிலான மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது அலை முதல் காலத்தை விட குறுகிய காலத்திற்கு நீடிக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் தொற்று உச்சமடையக்கூடும் என்பதும் சாத்தியமாகும். அதுபோல ஏற்கனவே நடந்துள்ளது. நாட்டின் பிற பகுதிகள் அமைதியாகிவிட்டபோது கேரளா மிகப் பெரிய எண்ணிக்கையில் தொற்றுகளைப் பதிவு செய்தது. மகாராஷ்டிராவில் தொற்று மீண்டும் உயரத் தொடங்கியபோது, ​​கேரளா குறையத் தொடங்கியது. மற்ற மாநிலங்களிலும் இது நடப்பதை நாம் காண முடிந்தது. மகாராஷ்டிரா சில வாரங்களில் சரிவைக் காட்டத் தொடங்குகிறது ஆனால், அதற்குள் இந்த நடவடிக்கை ஆந்திரா அல்லது கர்நாடகா அல்லது தமிழ்நாட்டிற்கு மாறக்கூடும். பிறகு, இன்னும் பீகார் அல்லது உத்தரபிரதேசம் அல்லது மேற்கு வங்கம் மற்ற மாநிலங்கள் வீழ்ச்சியடையும்போது இரண்டாவது அலை தொடங்கக்கூடும்.

source https://tamil.indianexpress.com/explained/india-coronavirus-second-wave-march-27-updates-286291/